‘தெய்வத் திருமகள்’, ‘தாண்டவம்’, ‘தலைவா’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். இவர் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் இளைய மகனும்கூட. இவரும், நடிகை அமலாபாலும் நீண்ட நாட்களாகவே காதலித்து வருவதாக தமிழ் சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனாலும், இருவரும் இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமலேயே இருந்தனர்.
இதை அவ்வப்போது உறுதிப்படுத்தும் விதமாக தான் இயக்கும் படங்களில் அமலாபாலை நடிக்க வைத்தார் ஏ.எல்.விஜய். இந்நிலையில், அமலாபாலும், ஏ.எல்.விஜய்யும் ஜுன் 12-ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளப் போவதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக செய்தி உலாவி கொண்டிருக்கிறது. இதுகுறித்து விரைவில் இருவரும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஏ.எல்.விஜய் தற்போது ‘சைவம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அமலாபாலும் தமிழில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போகும் செய்தி கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 comments
Post a Comment